பி.கே.ஆரிலிருந்து விலகிய பெத்தாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்!

top-news
FREE WEBSITE AD

ஜுன் 13,

பி.கே.ஆர் கட்சியின் பெத்தாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரான Lee Chean Chung பி.கே.ஆரின் தேசிய பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தாம் வகித்து வந்த அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் தாம் விலகுவதாகவும் கட்சியின் தலைமையிடம் ஏற்பட்ட மனவருத்தத்தால் இந்த முடிவைத் தாம் எடுத்திருப்பதாக Lee Chean Chung தெரிவித்தார். பி.கே.ஆரின் கட்சி பொறுப்புகளிலிருந்து விலகினாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதாகவும் அடுத்த பொதுத் தேர்தல் வரையும் பக்காத்தான் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினராகவே இருப்பேன் என Lee Chean Chung உறுதியளித்தார். 

22 ஆண்டுகள் பி.கே.ஆரில் பயணிக்கும் எனக்கு பி.கே.ஆர் பல அங்கீகாரங்களைக் கொடுத்துள்ளது. அதற்கு நன்றி கடனாக நாடாளுமன்றப் பதவியை ராஜினாமா செய்யவில்லை என Lee Chean Chung தெரிவித்தார். குறிப்பாக கடந்த மே 29, பெத்தாலிங் நாடாளுமன்றத்திற்கான மக்கள் நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்பட்டதால் தொடங்கிய பல மக்கள் நலத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தாம் தள்ளப்பட்டிருப்பதாகவும் Lee Chean Chung தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பி.கே.ஆர் கட்சியின் தலைமைக்கு விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாகவும் இது வரையும் எந்தவொரு பதிலையும் பி.கே.ஆர் தலைமை வழங்காததால் பி.கே.ஆரிலிருந்து தாம் முழுமையாக விலகுவதாக Lee Chean Chung தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *