பி.கே.ஆர் ஊழல் கட்சி! பெரிக்காத்தான் MP நாடாளுமன்றத்தில் சாடல்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 27,

அரசாங்கத்தின் பிரதான கட்சியான பி.கே.ஆர் கட்சி ஊழல் கட்சி என நாடாளுமன்றத்தில் பெரிக்காத்தான் Besut நாடாளுமன்ற உறுப்பினர் Che Mohamad Zulkifly Jusoh சாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பி.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வாரின் நீண்ட நாள் நண்பருமான Datuk Seri Shamsul Iskandar ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு தொழிலதிபருக்கு ஆதரவாகச் செயல்பட்டிருப்பது பி.கே.ஆர் கட்சி ஊழல் கட்சி என மக்களுக்கு நினைவூட்டியிருப்பதாகப் பெரிக்காத்தானின் Besut நாடாளுமன்ற உறுப்பினர் Che Mohamad Zulkifly Jusoh சாடினார். இதற்கு பெரிக்காத்தானின் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததும் நாடாளுமன்றத்திலிருந்த பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையானக் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

நாடாளுமன்றத்தின் துணைச் சபாநாயகர் Datuk Ramli Mohd Nor பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தை மீட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தியும் பெரிக்காத்தானின் Besut நாடாளுமன்ற உறுப்பினரும் பெரிக்காத்தானின் "Hulu Terengganu நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் கருத்துகளை மீட்டுக்கொள்ள மறுத்தனர். பி.கே.ஆர் கட்சியின் உறுப்பினர்கள் அனைவருமே ஊழல்வாதிகள் என குறிப்பிடுவதை ஏற்க முடியாது. மேலும் Datuk Seri Shamsul Iskandarக்கு எதிரான ஊழல் வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதாகவும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்காத வரையில் இது போன்ற கருத்துகளை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்றத்தின் துணைச் சபாநாயகர் Datuk Ramli Mohd Nor பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததுடன் நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து பெரிக்காத்தானின் Besut நாடாளுமன்ற உறுப்பினரும் பெரிக்காத்தானின் "Hulu Terengganu நாடாளுமன்ற உறுப்பினரும் தெரிவித்த கருத்துகளை நீக்குவதாகத் தெரிவித்தார்.,

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *