வெள்ளி : 9 மே, 2025
6 : 08 : 47 PM
முக்கிய செய்தி

PKR மகளிர் தேர்தல்! Fadhlina Sidek VS Rodziah Ismail!

top-news

மார்ச் 11,

பி.கே.ஆர் கட்சியின் தலைமைக்கானத் தேர்தல் மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தேசிய மகளிர் தலைவருக்காக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் Rodziah Ismail போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கல்வி அமைச்சராகவும் NIBONG TEBAL நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் Fadhlina Sidek பி.கே.ஆர் கட்சியின் நடப்பு மகளிர் தலைவராக இருப்பதால் அவர் தொடர்ந்து மகளிர் தலைவியாகப் போட்டியிடுவாரா அல்லது கட்சியின் மற்ற பொறுப்புகளுக்குப் போட்டியிடுவாரா என்பதை உறுதிப்படுத்தாத நிலையில் Rodziah Ismail பி.கே.ஆர் கட்சியின் தேசிய மகளிர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகவும் பி.கே.ஆர் கட்சியின் தலைமையும் ஆதரவளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் Rodziah Ismail-வும் Fadhlina Sidek-க்கும் தேசிய மகளிர் தலைவருக்காகப் போட்டியிட்டனர். Fadhlina Sidek 18,923 வாக்குகளும் Rodziah Ismail 18,891 வாக்குகளும் பெற்றனர். 32 வாக்குகள் வித்தியாசத்தில் Rodziah Ismail தோல்வியடைந்த நிலையில் தற்போது Fadhlina Sidek கடுமையானப் போட்டியை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து Fadhlina Sidek வெளிப்படையாக அறிவிக்காத நிலையில் Fadhlina Sidek உதவித் தலைவருக்குப் போட்டியிடவும் வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

PKR nasional bakal menyaksikan saingan sengit bagi jawatan Ketua Wanita apabila Ahli Parlimen Ampang, Rodziah Ismail, mengumumkan pencalonannya. Penyandang jawatan, Fadhlina Sidek, belum mengesahkan penyertaannya. Pada pemilihan 2022, Fadhlina menang dengan hanya 32 undi majoriti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *