Rafizi Ramli மன்னிப்புக் கேட்க வேண்டும்! ஜொகூர் PKR வலியுறுத்து!

top-news


மே 11,

PKR கட்சியின் தொகுதித் தலைவர்களுக்கானத் தேர்தலில் வெற்றிப் பெற்ற தலைவர்களின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் Rafizi Ramli கருத்து தெரிவித்திருப்பது அரசியல் நாகரீகமற்ற செயல் என்றும் கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருந்து கொண்டு RAFIZI RAMLI இப்படி கருத்து தெரிவித்திருப்பதுைதொகுதித் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால் RAFIZI RAMLI தொகுதித் தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பி.கே.ஆர் கட்சியின் JOHOR BAHRU தொகுதித் தலைவரான MOHAMAD TAUFIQ ISMAIL தெரிவித்துள்ளார். 

PKR கட்சியின் தொகுதித் தேர்தல் நிறைவடைந்து தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தொகுத் தலைவர்களுக்கானத் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் வாக்காளர்களில் சிலர் பி.கே.ஆர் உறுப்பினர் இல்லை என்பதையும் RAFIZI RAMLI கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது கட்சி உறுப்பினர்களின் நேர்மையைக் கேள்விக்குறியாக்கும் கருத்தாக இருப்பதாகவும் RAFIZI தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல தொகுதித் தலைவர்களுக்கு நெறுடலை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதனால் RAFIZI மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பி.கே.ஆர் கட்சியின் JOHOR BAHRU தொகுதித் தலைவரான MOHAMAD TAUFIQ ISMAIL வலியுறுத்தினார். 

Ketua Cabang PKR Johor Bahru, Mohamad Taufiq Ismail, mengecam Rafizi Ramli atas kenyataan berunsur penghinaan terhadap beberapa Ketua Cabang. Beliau menyifatkan tindakan itu sebagai tidak matang dan mendesak Rafizi menarik balik kenyataan serta memohon maaf secara terbuka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *