பி.கே.ஆரிலிருந்து என்னை வெளியேற்ற யாராலும் முடியாது! RAFIZI உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 08 Mar, 2026
மார்ச் 8,
பி.கே.ஆர் கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற யாராலும் முடியாது என பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவரும் பொருளாதார முன்னாள் அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli உறுதியாகத் தெரிவித்தார். பி.கே.ஆரின் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் Datuk Seri Rafizi Ramli அடுத்த பொதுத்தேர்தலில் பண்டான் நாடாளுமன்றத்திலேயே போட்டியிடுவேன் என நேர்காணலில் தெரிவித்த போது பி.கே.ஆர் அவருக்கு நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்கினால் மட்டுமே அவர் போட்டியிட முடியும் என பி.கே.ஆர் பொதுச் செயலாளர் Fuziah Salleh கருத்து தெரிவித்தார்.
என்ன ஆனாலும் அடுத்த பொதுத் தேர்தலில் பண்டான் நாடாளுமன்றத்தில் நான் போட்டியிடுவேன் என Datuk Seri Rafizi Ramli பதிலளித்துள்ளார். இப்போது இருக்கும் பி.கே.ஆர் என்பது என்னுடைய உழைப்பாலும் உருவானது. நான் மட்டும் தான் உழைத்தேன் என சொல்ல முடியாது. ஆனால், பி.கே.ஆரின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களின் நானும் முக்கியமானவர் என்பதால் பி.கே.ஆரிலிருந்து நான் வெளியேறமாட்டே. பி.கே.ஆர் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாகப் பலர் கருதுகிறார்கள். ஆனால் பி.கே.ஆர் கட்சியில் பொறுப்பில் இல்லாதவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது என்கிற எண்ணத்தால் நான் பி.கே.ஆரின் துணைத் தலைவர் போட்டியில் தோல்வி அடைந்ததும் அமைச்சர் பதவியிலிருந்து விலகினேனே தவிர கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் நான் பதவியிலிருந்து விலகவில்லை என Datuk Seri Rafizi Ramli விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



