சபா பி.கே.ஆர் ஆலோசகராக Datuk Seri Christina Liew நியமனம்!

top-news

ஜூன் 30,


சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, சபா மாநில பி.கே.ஆர் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வரும் நிலையில் சபா மாநில பி.கே.ஆர் ஆலோசகராக Datuk Seri Christina Liew நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக Sepanggar நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Mustapha Sakmud சபா மாநில பி.கே.ஆருக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் புதியவர்களுக்குப் பொற்றுப்புகளை வழங்கிறார். இந்த நியமனங்கள் 2025 ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையில் அமர்வில் இருக்கும் என Datuk Mustapha Sakmud தெரிவித்தார். 

Datuk Seri Christina Liew சபா மாநிலச் சுற்றுலா கலாச்சார சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். சபா மாநில பி.கே.ஆரின் துணைத் தலைவராக Datuk Peto Galim, உதவித் தலைவர்களாக Datuk Sangkar Rasam, Azmi Datu Tambuyung , Mohd Amin Mem ஆகிய முவரும் நியமிக்கப்பட்டதுடன் மாநிலச் செயலாளராக Abdul Razak Jamil, இளைஞர் பிரிவுத் தலைவராக Mohd Guntur Sangkar ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக Sepanggar நாடாளுமன்ற உறுப்பினரும் சபா மாநில பி.கே.ஆர் தலைமை ஒருங்கிணைப்பாளருமான Datuk Mustapha Sakmud தெரிவித்தார்.


PKR Sabah melakukan rombakan dengan melantik Datuk Seri Christina Liew sebagai Penasihat Negeri. Datuk Mustapha Sakmud kekal sebagai Ketua Penyelaras, manakala beberapa pemimpin baharu dilantik bagi penggal 2025 hingga 2028 untuk memperkukuh strategi menghadapi pilihan raya negeri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *