ஊழல் செய்தவர் பி.கே.ஆர் உறுப்பினராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்! – பி.கே.ஆர் தலைமை உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 25 Mar, 2026
மார்ச் 25,
பிரபல தொழிலதிபர் Victor Chin பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்திருப்பது உண்மையாக இருந்தால் முதல் நடவடிக்கையைப் பி.கே.ஆர் எடுக்கும் என பி.கே.ஆரின் தகவல் பிரிவுத் தலைவரும் அமைச்சருமான Datuk Fahmi Fadzil உறுதியளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு பி.கே.ஆர் உறுப்பினரையும் நாங்கள் பாதுகாக்கமாட்டோம் என Datuk Fahmi Fadzil தெரிவித்தார். பி.கே.ஆர் தலைவரும் பிரதமருமான Datuk Seri Anwar Ibrahim ஊழலுக்கு எதிராக உறுதியுடன் இருப்பதை Datuk Fahmi Fadzil சுட்டிக்காட்டினார்.
சம்மந்தப்பட்ட தொழிலதிபர் பி.கே.ஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு லஞ்சம் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தது குறித்து பி.கே.ஆர் தலைமை காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முடிவெடுத்திருப்பதாகவும் அதன் கட்சித் தலைமை உட்பட கடைநிலை உறுப்பினர் வரையிலும் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பதாக Datuk Fahmi Fadzil தெரிவித்தார். தொழிலதிபரின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு பி.கே.ஆர் உறுப்பினராக இருந்தாலும் கட்சி அதன் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து மாறாது என Datuk Fahmi Fadzil உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



