'மிஸ்டர் R' நான் அல்ல; எந்தப் பங்குகளும் என்னிடம் இல்லை - ரமணன் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

மார்ச் 25,

கார்ப்பரேட் மாஃபியா ஊழலைச் சமரசம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சரும் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவருமான  டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விக்டர் சின், இந்த விவகாரத்தைத் தீர்ப்பதற்காக 9.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாகக் கூறப்படும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என  டத்தோஶ்ரீ ரமணன் சவால் விடுத்தார்.

சுங்கை பூலோவில் உள்ள தமது சேவை மையத்தில் இன்று நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டத்தோஶ்ரீ ரமணன், விக்டர் சின் குறிப்பிடும் 'மிஸ்டர் R' யார் என்பதற்கு அவரே பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.. 

பொறுப்பற்ற சில தரப்பினர் இந்த விவகாரத்தில் தம்மைத் தொடர்புபடுத்திப் பேசுவதை தாம் அறிவதாகவும், குறிப்பாகத் தமக்கு மில்லியன் கணக்கான பங்குகள் மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும் அவர் விளக்கமளித்தார். 

பொதுப் பங்குச் சந்தையில் தாம் இதுவரையில் எந்தவொரு பங்குகளையும் கொண்டிருந்ததில்லை என டத்தோஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.  எந்தவொரு விவேகமுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் இவ்வளவு பெரிய அளவிலான பங்குகளைத் தன்னிச்சையாக மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என டத்தோஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற பங்குப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தால், அவை மத்திய வங்கி மற்றும் செக்யூரிட்டீஸ் கமிஷன் (SC) போன்ற நிதி நிறுவனங்களால் உடனடியாக சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளாகக் கண்டறியப்பட்டிருக்கும் என டத்தோஶ்ரீ ரமணன் சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *