தேர்தலில் பி.கே.ஆர் முழுமையாக வெற்றி பெற புதிய வியூகம்! – NURUL IZZAH சூளுரை!

top-news

மே 24,

சபா மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆர் கட்சி போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளில் முழுமையாக வெற்றி பெற புதிய வியூகத்தை வகுக்கவிருப்பதாகவும் பி.கே.ஆர் துணைத் தலைவர் Nurul Izzah Anwar தெரிவித்தார். எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பி.கே.ஆர் 13 சட்டமன்றங்களில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் அதற்கான சட்டமன்றங்களைத் தேர்வு செய்திருப்பதாகவும் Nurul Izzah Anwar தெரிவித்தார். சபா தேர்தலில் புதிய வியூகத்தின் மூலம் பி.கே.ஆர் புதிய அரசியல் பாதையில் பயணிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போது பக்காத்தான் ஹராப்பானின் கூட்டணி பாரிசானுடன் கூட்டணி அமைத்து சபா சடட்மன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியானாலும் பி.கே.ஆர் கட்சி குறைந்தபட்சம் 13 சட்டமன்றங்களில் போட்டியிட வேண்டும் என கட்சியின் தேர்தல் குழுவிடம் வலியுறுத்தியதாகவும் இதனால் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்படும் சிக்கல்களை முழுமையாகப் பிரச்சனை இல்லாமல் தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகவும் Nurul Izzah Anwar தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியின் எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு தேர்தலில் முக்கிய மாற்றங்களைத் தாம் நிகழ்த்தவிருப்பதாக Nurul Izzah Anwar தெரிவித்தார்.

Nurul Izzah Anwar menyatakan PKR akan menggunakan strategi baharu untuk memenangi kesemua 13 kerusi yang ditandingi dalam Pilihan Raya Negeri Sabah. Beliau yakin strategi ini akan membawa perubahan politik penting dan mengekalkan kestabilan dalam pakatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *