ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேறுங்கள்! சும்மா மிரட்டாதீர்! அம்னோவுக்கு PKR கண்டனம்!
- Thinagaren Sanggaren
- 25 Dec, 2025
டிசம்பர் 25,
ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறும், வெளியேறும் என சும்மா பூச்சாண்டித்தனம் காட்ட வேண்டாம் என ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Faezudin Puad வலியுறுத்தினார். அரசாங்கத்தின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்தால் அரசங்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் அம்னோ அதைச் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும். அதை விடுத்து வெளியேறுகிறோம், நேரம் வந்துவிட்டது என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Datuk Dr Akmal Saleh அவ்வப்போது கருத்துகளைத் தெரிவித்து வருவது சந்தேகத்தை எழுப்புவதாக Faezudin Puad தெரிவித்தார்.
நீதித்துறையில் அரசியல் தலையீடுகள் இருக்க கூடாது என்பதில் பக்காத்தான் உறுதியாக உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உள்ள அரசியல் தலைவர்களைப் பக்காத்தான் பாதுகாக்க விரும்பாது என்றும் Faezudin Puad தெரிவித்தார். இந்த அடிப்படை அரசாங்கக் கொள்கையை ஏற்க முடியாத அரசியல் தலைவர்களும் அவர்களின் கட்சிகளும் சும்மா மிரட்டிக்கொண்டு பூச்சாண்டித்தனம் காட்டாமல் தாராளமாக ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என பூலாய் பி.கே.ஆர் தலைவருமான Faezudin Puad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



