இஸ்ரேலில் கைதான 27 மலேசியர்களின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்போம்! பி.கே.ஆர் ஷாமளா வேண்டுகோள்

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 3,

இஸ்ரேல் இராணுவத்தால் கைதான 27 மலேசியர்களின் நிலைமை குறித்து நாடு முழுவதும் பெரும் கவலை நிலவுவதால் இச்சூழ்நிலை மிகுந்த உணர்ச்சிப் பூர்வமானதாய் இருந்தாலும், பிரதமர் அன்வார் தலைமையிலான மடானி அரசு உறுதியுடன் ஒவ்வொரு முன்னெடுப்பையும் மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது என ஜொகூர் மாநில பி.கே.ஆர் உதவித் தலைவர் ஷாமளா வாசுதேவன் தெரிவித்தார்..

பிரதமர் டத்தோக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் தனிப்பட்ட முறையில் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன், எங்கள் குடிமக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து அவர்கள் விடுதலையாகும் வரையில் நிம்மதி கொள்ளமாட்டேன் என்கிற உறுதியோடு செயல்பட்டு வருகிறார். சர்வதேச நாட்டுத் தலைவர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பும், மனிதாபிமானமிக்க வழியாக பாதுகாப்பான தீர்வுகள் அடையாளம் காணப்பட்டு, செயல்பட்டு வருகிறார் நம் பிரதமர் என ஜொகூர் மாநில பி.கே.ஆர் உதவித் தலைவர் ஷாமளா வாசுதேவன் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் அமைதியாக இருந்து, தரவுகளற்ற ஊகங்களை நம்பாமல், அதிகாரப்பூர்வத தகவல்களை மட்டுமே சார்ந்து செயல்படும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் கைதான 27 பேரின் குடும்பங்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களுக்கு ஆதரவாகவும் மன உறுதி வழங்கும்படியாகவும் நாம் செயல்படுவது அவசியம் என அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நேரத்தில், நாம் அனைவரும் பிரார்த்தனையிலும், ஒற்றுமையிலும், நாட்டுப்பற்று உணர்விலும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். மலேசியர்களின் பாதுகாப்பு எங்கள் மிகப் பெரிய முன்னுரிமை என்பதை உலகுக்கு உணர்த்துவோம் என ஜொகூர் மாநில பி.கே.ஆர் உதவித் தலைவர் ஷாமளா வாசுதேவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *