ஜொகூர் மாநில பி.கே.ஆர் உதவித் தலைவரானார் ஷாமளா வாசுதேவன்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 10,

பி.கே.ஆரின் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கான நியமனங்கள் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் ஜொகூர் மாநிலத்தின் உதவித் தலைவராக செகாமாட் தொகுதி பி.கே.ஆர் தலைவர் ஷாமளா வாசுதேவன் நியமனம் பெற்றார். ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் தலைவரும் அமைச்சருமான டத்தோக் ஸ்ரீ சலிஹா முஸ்தபா இந்த நியமனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஜொகூரில் 26 பி.கே.ஆர் தொகுதிகளின் தலைவர்களும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான மேலவைக் கூட்டத்தில் இந்த நியமனங்கள் வழங்க்ப்பட்டதாக டத்தோக் ஸ்ரீ சலிஹா முஸ்தபா தெரிவித்தார். 

ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் துணைத் தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசாஹ்ருதீன் குஸ்னி நியமிக்கப்பட்ட நிலையில் உதவித் தலைவர்களாக முன்னாள் கல்வி அமைச்சரும் சிம்பாங் ரெங்காம் பி.கே.ஆர் தொகுதித் தலைவருமான மஸ்லீ மாலிக், தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா, செகாமாட் பி.கே.ஆர் தலைவர் ஷாமளா வாசுதேவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடந்த பி.கே.ஆர் தொகுதித் தலைவர்களானத் தேர்தலில் 403 வாக்குகள் பெற்று செகாமாட் பி.கே.ஆர் தொகுதித் தலைவராக ஷாமளா வாசுதேவன் வெற்றிப் பெற்றார். ஜொகூர் பி.கே.ஆரின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய பெண் மாநில உதவித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜொகூர் பி.கே.ஆரின் புதிய தலைமைத்துவம் சீர்மிகு பணிகளை மேற்கொள்ள அனைத்து பி.கே.ஆர் உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும் என ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் தலைவரும் அமைச்சருமான டத்தோக் ஸ்ரீ சலிஹா முஸ்தபா கேட்டுக்கொண்டார். தற்போதை அரசியல் சவால்களை எதிர்க்கொள்ளும் திறன் பி.கே.ஆரில் இருந்தாலும் அதன் உள்கட்டமைப்பிலிருக்கும் சிக்கல்களையும் அதன் முரண்களையும் சீர் செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் தலைவரும் அமைச்சருமான டத்தோக் ஸ்ரீ சலிஹா முஸ்தபா நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *