பசு மீது மோதி தோட்டத் தொழிலாளி பரிதாப பலி!
- Shan Siva
- 04 May, 2026
ஈப்போ, மே 4: இன்று அதிகாலை சுமார் 2.40 மணியளவில், பத்து காஜா அருகே சாலையின் நடுவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் பசு மீது மோதியதில் உயிரிழந்தார்.
ஏழவது மைலில் உள்ள,
ஜாலான் தஞ்சோங் துவாலாங் என்ற இடத்தில்,
30 வயதான பழங்குடியினத்தைச்
சேர்ந்த ஷா ரின் புசு என்ற தோட்டத் தொழிலாளி, பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பத்து
காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் ஏவான் முகமது கூறினார்.
பாதிக்கப்பட்டவர்
கோப்பெங்கிலிருந்து கம்போங் ஆயர் தேன நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் திடீரெனத் தோன்றிய பசுவை அவரால் தவிர்க்க
முடியாததால், மோதல் ஏற்பட்டது என்று நூர் ஏவான் தெரிவித்தார்!.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



