பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு துருக்கியில் உயரிய விருது
- Tamil Malar (Reporter)
- 06 Jan, 2026
அங்காரா, ஜன. 6-
மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று தொடங்கி வியாழன் வரையிலான துருக்கி அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, துருக்கி குடியரசின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக்' (Order of the Republic) விருதைப் பெறவுள்ளார்.
துருக்கியில் உள்ள மலேசிய தூதர் சசாலி முஸ்தபா கமால் கூறுகையில், இந்த விருது துருக்கி குடியரசின் மிக உயர்ந்த அங்கீகாரமாகும். மலேசியா-துருக்கி இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் நெருக்கமாகவும், முக்கியத்துவமாகவும் வலுப்படுத்தியதற்கான பாராட்டாக அன்வாருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
"வெளிநாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவம் இது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை நெருக்கமாக்கியதற்கு இது அங்கீகாரம்," என்று அவர் இன்று அங்காராவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இவ்விருது நாளை துருக்கி அதிபர் ரெஜெப் தய்யிப் எர்டோகனால் அன்வாருக்கு வழங்கப்படும் என தூதர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



