முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீத் முகமது அவர்களின் ஜனாஸா தொழுகையில் பிரதமர் பங்கேற்பு
- Tamil Malar (Reporter)
- 19 Feb, 2026
புத்ராஜெயா, பிப். 19-
முன்னாள் தலைமை நீதிபதி அல்லாஹ்யர்ஹாம் துன் அப்துல் ஹமீத் முகமது அவர்களின் ஜனாஸா தொழுகையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை புத்ராஜெயா பிரிசின்ட் 20, தாமான் செலாத்தான் முஸொல்லாவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் சுமார் மாலை 4.50 மணியளவில் அங்கு வந்தார். அதற்கு முன்னர் அஸர் தொழுகையை வழக்கறிஞர் டத்தோ ஸுல்கிப்லி நோர்டின் இமாமாக இருந்து நடத்தினார். பின்னர் நடைபெற்ற ஜனாஸா தொழுகையில் பிரதமர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் தலைமை நீதிபதி டத்தோ ஸ்ரீ வான் அக்மத் பாரித் வான் சாலே, புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் ரட்சி ஜிடின் மற்றும் முன்னாள் அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஸ்தபா முகமது உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



