ஹரிராயா முன்னிட்டு கூடுதல் பொதுவிடுமுறை – பிரதமர் அறிவிப்பு

top-news

கோத்தா கினபாலு, மார்ச் 15-

ஹரிராயா திருநாளை முன்னிட்டு மலேசிய மக்களுக்கு ஒரு நாள் கூடுதல் பொதுவிடுமுறை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

அவரது விளக்கத்தின் படி,  ஷவ்வால் 1 வரும் தேதியைப் பொறுத்து இந்த கூடுதல் விடுமுறை வழங்கப்படும். ஹரிராயா வரும் மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டால், அதனைத் தொடர்ந்து மார்ச் 23 (திங்கட்கிழமை) கூடுதல் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படும்.

ஆனால் ஹரிராயா மார்ச் 21 (சனிக்கிழமை) அன்று கொண்டாடப்பட்டால், அதற்கு முந்தைய நாளான மார்ச் 20 (வெள்ளிக்கிழமை) கூடுதல் விடுமுறையாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹரிராயா வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை எந்த நாளில் வந்தாலும் மக்களுக்குக் கூடுதல் விடுமுறை வழங்கப்படும் என்பதால் மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் பிரதமர் கூறினார்.

மக்கள் குடும்பத்தினருடன் திருநாளை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் இந்த கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *