பெரும் வெள்ள பாதிப்பு: 500 மில்லியன் உடனடி நிதி ஒதுக்கீடு

top-news

செய்தி-வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், டிச. 2-

சமீபத்திய பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 500 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார்.

2026-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மசோதா மீதான இரண்டாம் வாசிப்பின் போது மேலவையில் இன்று பேசிய அவர், “பள்ளிகள், மருத்துவமனைகள், அடிப்படை வசதிகள், சாலைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளையும் உடனடியாக சரிசெய்ய நான் 500 மில்லியன் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளேன்” என்றார்.

மாநில, கூட்டரசு அரசுத் துறைகள் அனைத்துக்கும் பாதிப்பு மதிப்பீடு செய்து உடனடி பழுதுபார்க்கும் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த வரவு-செலவுத் திட்ட மசோதா கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி பிரதமராலேயே தாக்கல் செய்யப்பட்டது.

நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன அதிகாரிகள், மாநில அரசுகளுடன் இணைந்து பேரிடர் தயார்நிலையை உயர்த்தியுள்ளதாகவும், தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *