பிரதமர்...பிரதமர் என அலையாதீர்! எந்த கட்சிக்கும் தகுதி இல்லை! – மகாதீர் காட்டம்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 18,

அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்விகளை எழுப்பி எந்த பயனும் இல்லை என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தெரிவித்துள்ளார். இவர் பிரதமர் அவர் பிரதமர் நான் பிரதமர் நீ பிரதமர் என அலைய வேண்டாம் என Tun Dr Mahathir Mohamad வலியுறுத்தினார். பொதுத்தேர்தலில் 112 நாடாளுமன்றங்களை வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். அது தான் பிரதமராவதற்கான ஒரே தகுதி என Tun Dr Mahathir Mohamad சுட்டிக்காட்டினார்.

ஆனால் அப்படி 112 நாடாளுமன்றங்களை வெல்லும் தகுதி எந்தவோர் அரசியல் கட்சிக்கும் இல்லை என Tun Dr Mahathir Mohamad நினைவூட்டினார். கூட்டணியாகவே இருந்தாலும் 112 நாடாளுமன்றங்களை வெல்ல முடியும் என்றால் 112 நாடாளுமன்றங்களை வென்ற பின்னர் பிரதமரை அறிவிப்பது தான் முறை என Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார். அரசியல் சூழ்ச்சியால் மலாய்க்காரர்கள் பிளவுப்பட்டுக் கிடக்கிறார்கள். அதனால் எந்தவொரு மலாய் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காது என்பதை Tun Dr Mahathir Mohamad தெரிவித்தார். பிரதமர் வேட்பாளருக்காக அலையாமல் மலாய்க்காரர்களின் வாக்குகளை ஒன்றிணைக்கும் முயற்சியை மேம்படுத்துங்கள் என முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *