தபால் வாக்கு செலுத்தினார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
- Surendran Sumdraraj
- 17 Apr, 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் தபால் வாக்குப்பதிவு நடைமுறை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பா.ம.க. (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது தபால் வாக்கை பதிவு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில், 87 வயதான ராமதாஸ் திண்டிவனம் தொகுதிக்கான தனது வாக்கை தபால் மூலம் செலுத்தினார். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்காகத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள இந்த தபால் வாக்குப்பதிவு முறையின் கீழ், தேர்தல் பணியாளர்கள் நேரடியாக அவருடைய இல்லத்துக்குச் சென்று வாக்கை பதிவு செய்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



