இஸ்லாமியர்களை ஒதுக்கிய அன்வாரின் கலப்பு அமைச்சரவை! பாஸ் கட்சி சாடல்!
- Thinagaren Sanggaren
- 20 Dec, 2025
டிசம்பர் 20,
அன்வாரின் புதிய அமைச்சரவை ஒரு முழுமையான அமைச்சரவை இல்லை என்றும் அது ஒரு கலப்பு அமைச்சரவை என்றும் இஸ்லாத்திற்கு எதிரான கலப்புகள் நிறைந்த அமைச்சரவை என்றும் பாஸ் கட்சியின் தலைவர் Datuk Seri Abdul Hadi Awang சாடினார். இந்த மலேசியா இஸ்லாமிய நாடு என்பதால் இந்த அமைச்சரவைக்கு Syubhah என தாம் பெயரிட்டுள்ளதாக Datuk Seri Abdul Hadi Awang தெரிவித்தார். Syubhah என்றால் குரானில் முழுமையற்ற, அரைகுறையானக் கலப்புகள் நிறைந்தவை என பொருள்படுகிறது.
இஸ்லாமியர்களும் இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் இடையில் ஓர் எல்லை இருக்க வேண்டும். அந்த எல்லையை அன்வார் மீறிவிட்டதால் அமைச்சரவை ஒரு கலப்பு அமைச்சரவையாகிவிட்டது என்பதை அடையாளப்படுத்த சரியான வார்த்தை Syubhah என பாஸ் கட்சியின் தலைவர் Datuk Seri Abdul Hadi Awang தெரிவித்தார், தூய்மையாகவும் தகுதியாகவும் இருக்கும் இஸ்லாம் மற்றவையுடன் கலந்தால் என்னவாகும் என பாஸ் கட்சியின் தலைவர் Datuk Seri Abdul Hadi Awang கேள்வி எழுப்பினார். மலாய்க்காரர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் ஆட்சியில் கலப்பு இருக்காது. அப்படி கலப்பில்லாத ஆட்சியைப் பாஸ் கட்சி வழங்கும் என்பதில் பாஸ் கட்சி உறுதியாக இருப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் Datuk Seri Abdul Hadi Awang உறுதியளித்துள்ளார்.
பெரிக்காத்தானின் கூட்டணியில் இருக்கும் எந்தவோர் இஸ்லாம்
அல்லாதவர்களும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாது அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் மட்டுமே
இருப்போம் எனும்படியாக பாஸ் கட்சியின் தலைவர் Datuk Seri Abdul
Hadi Awang கருத்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



