மக்களின் சுமையில் நாடு சுற்றுகிறார்! அன்வார் PMX இல்லை அன்வார் TAX! – முகைதீன் சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 26,

மக்களின் சுமையை அறியாமல் வரிக்கு மேல் வரியை விதித்து வருவதாக முன்னாள் பிரதமரும் பெரிக்காத்தான் தலைவருமான Tan Sri Muhyiddin Yassin  தெரிவித்தார். இன்று தலைநகரில் நடைபெற்ற TURUN ANWAR பேரணியில் பங்கேற்ற முகைதீன், அன்வாரின் ஆட்சி CUKAI ஆட்சி என்றும் அன்வார் CUKAI தலைவர் என்றும் விமர்சித்தார். CUKAI என்றால் ஆங்கிலத்தில் TAX என்பார்கள். அப்படியான TAX என்பதன் உருவமாக PMX  இருப்பதாகவும் அவரின் ஆட்சி CUKAI ஆட்சி என்றும் Tan Sri Muhyiddin Yassin சாடினார்.  நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வெளிநாடுகளிடம் நாட்டை அடகு வைப்பதையும் சொந்த நாட்டு மக்களின் மீது வரியைச் சுமத்துவது மட்டுமே அன்வாரின் ஆட்சியாக இருப்பதாக Tan Sri Muhyiddin Yassin குற்றம்சாட்டினார்.



நானும் பிரதமராக இருந்தவர் எனும் அடிப்படையில் ஒரு நாட்டின் பிரமருக்கான வரையறைகளைத் தாமும் அறிந்திருப்பதாக Tan Sri Muhyiddin Yassin  தெரிவித்தார். ஆனால் பிரதமர் அன்வார் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தொடர்ந்து மக்களின் மீது சுமையைத் திணித்து வருகிறார். உலக நாடுகளின் மத்தியில் மலேசியா சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு நாட்டின் பிரதமர் ஒரு சில முடிவுகளை எடுப்பார். நானும் பிரதமராக இருந்த போது உலக நாடுகளுக்கு மத்தியில் தலை சிறந்த நாடாக மலேசியாவை முன்னிருத்த வேண்டும் என்கிற சிந்தனையைக் கொண்டிருந்தேன்.


ஆனால் மக்களை வறுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதாளத்தில் தள்ளும் வகையில் விற்பனை சேவை வரிகள் இருக்கும் என்பதால் உலக நாடுகளுக்கு இணையாக மலேசியாவை வளர்த்தெடுப்பது முக்கியமா இல்லை மலேசிய மக்களின் வாழ்வாதாரம் முக்கியமா எனும் கேள்வியின் பதிலாக நான் மக்களின் வாழ்வாதாரமே முக்கியம் என்பதை உணர்ந்தேன். ஆனால் அன்வார் இதை உணரவில்லை. மக்கள் தலையில் சுமையை இறக்கி வைத்து விட்டு, நாடு நாடாகச் சுற்றுகிறார் என இன்று அன்வாருக்கு எதிராகத் தலைநகரில் நடந்த பேரணியில் முகைதீன் தெரிவித்தார்.

(மேலும் விரிவாக நாளை 27 ஜூலை தமிழ் மலர் நாளிதழைக் காணவும்)

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *