மூடாவுடன் இணைந்து பெர்சாத்து ஆட்சியமைக்க முடியும் - அஸ்மின் அலி நம்பிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 9:

வரும் சனிக்கிழமை  ஜொகூர் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியால் மூடாவுடன் இணைந்து அடுத்த ஜொகூர் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சியின் தேர்தல் இயக்குநராகவும் இருக்கும் அஸ்மின், கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தாங்கள் போட்டியிடும் 16 இடங்களிலும் வெற்றிபெற கட்சிக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.
2022 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இந்தத் தொகுதிகளின் வாக்காளர்கள் பெர்சாத்து கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளது, என்று நேற்று கம்போங் சோக்ரோவில் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தபோது அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *