மரம் விழுந்ததில் கோயிலும் 5 வாகனங்களும் சேதம்!
- Thinagaren Sanggaren
- 29 Sep, 2025
செப்டம்பர் 29,
இன்று அதிகாலை ஜார்ஜ்டவுனில் உள்ள Lintang Macallum சாலையில் மரம் விழுந்ததில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 வாகனங்கள் சேதமடைந்ததுடன் கோயில் சுவர்களும் இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை 2.40 மணியளவில் மரம் விழுந்ததாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாகவும் சம்பவ இடத்திற்கு மீட்பு அதிகாரிகளுடன் விரைந்ததாகவும் பினாங்கு மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார். மரம் விழுந்ததில் எந்தவோர் உயிர்சேதமும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மரம் விழுந்ததில் 3 கார்கள் 2 மோட்டார்
சைக்கிள்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சாலையோரம் இருந்த கோயிலின் சுவர்களும் கூரைகளும்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பினாங்கு மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John
Sagun Francis தெரிவித்தார். இன்று காலை 10 மணி வரையில் சாலையில்
துப்பரவு பணிகளை மேற்கொண்ட நிலையில் இன்று நண்பகல் 1 மணி முதல் சாலை மீண்டும் போக்குவரத்துக்குத்
திறக்கப்படும் என பினாங்கு மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun
Francis தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



