மரம் விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டிகள் காயம்! வாகனங்கள் சேதம்! – GEORGETOWN
- Thinagaren Sanggaren
- 21 Dec, 2025
டிசம்பர் 21,
பினாங்கு GEORGETOWN இல் உள்ள சாலையோர மரம் விழுந்ததில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியும் பயணி ஒருவரும் காயமடைந்தனர். சாலையின் ஓரத்திலிருந்த மரம் அருகிலிள்ள வாகனத்தின் மீது விழும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவி வருகிறது. நேற்றிரவு 7.18 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பினாங்கு மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.
சாலையில் சென்றுக் கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிளோட்டிகளும் மரக்கிளைகளுக்கிடையில் சிக்கியதாகவும் பொதுமக்களின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் John Sagun Francis தெரிவித்தார். இச்சம்பவத்தில் 64 வயது முதியவரின் வாகனம் கடுமையாகச் சேதமடைந்திருப்பதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் John Sagun Francis தெரிவித்தார். இரவு 11 மணிக்கு மரக்கிளைகள் முழுமையாக அகற்றப்பட்டு சாலை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதாகப் பினாங்கு மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



