ஷா ஆலாம், மார்ச் 11-
பூச்சோங்கின் தாமான் கின்ராரா குடியிருப்பு பகுதியில் செக்கு சந்திராவைச் சுற்றி இடம்பெற்ற சேதப்படுத்தல் மற்றும் குற்ற மிரட்டல் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் சில முக்கியமான முன்னேற்றங்கள் கிடைத்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷசேலி கஹார் கூறுகையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலதிக விவரங்களை தற்போது வெளியிட முடியாது என்றார்.
“இன்று காலை நடந்த விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு, இரு சம்பவங்களின் விசாரணையிலும் சில நேர்மறையான தடயங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும், விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால் அவற்றை தற்போது பகிர முடியாது,” என்றார்.
மேலும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



