குறைந்த விலையில் குளோன் வாகனங்கள் விற்ற கும்பல் – போலீஸ் நடவடிக்கையில் 1.1 மில்லியன் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 18-

சந்தை விலையை விட 50 முதல் 60 சதவீதம் குறைவாக வாகனங்களை வழங்கிய குளோன் கார் கும்பலை மலேசிய போலீசார் சிறப்பு நடவடிக்கையின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 1.1 மில்லியன் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறையின் இயக்குநர் டத்தோ எம் குமார் தெரிவித்தார்.

 “Op Lejang Mewah Klon” என்ற பெயரில் இந்த நடவடிக்கை மார்ச் 12 முதல் 15 வரை நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை சுமார் ஐந்து மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ரகசிய விசாரணையின் விளைவாகும் எனவும் அவர் கூறினார்.

கெடா, கிளந்தான், ஜொகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 12 உள்ளூர் நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்களும், 2 பெண்களும் உள்ளனர். இவர்களின் வயது 33 முதல் 60 வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கும்பல் போலியான ஆவணங்கள் மற்றும் பதிவு எண்களை பயன்படுத்தி வாகனங்களை மாற்றியமைத்து, குறைந்த விலையில் விற்பனை செய்ததாக நம்பப்படுகிறது. இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *