RM46,000 ரொக்கத்தைக் கொள்ளையடித்த கும்பலைத் தேடும் காவல்துறை!

top-news

மார்ச் 15,

வணிகக் கடை வளாகத்தில் முகமூடி அணிந்த மூவர் கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார். கிள்ளானின் மேரு சாலையில் நண்பகல் 12.26 மணிக்கு 3 பேர் கொண்ட கும்பல் முகமூடியுடன் கொள்ளையடித்ததாகப் பாரிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் நண்பகல் 1.19 மணிக்குக் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக S Vijaya Rao தெரிவித்தார்.

காணொலியின் அடிப்படையில் பாராங் கத்திகளுடன் வணிகக் கடைக்குள் நுழைந்தவர்கள் சுமார் RM46,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்தாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாராங் கத்தியால் கடையில் இருந்தவர்கள் தாக்கப்பட்டவில்லை என்றாலும் முகமூடி அணிந்தவர்களின் முக்கிய நோக்கமாகப் பணம் இருந்திருப்பதாகவும் காணொலியின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடி வருவதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S Vijaya Rao தெரிவித்தார்.

Polis sedang memburu tiga perompak bersenjata parang yang merompak RM46,000 tunai dari sebuah kedai di Klang mencuri. Rakaman kejadian tular di media sosial. Polis mengesahkan tiada kecederaan berlaku dan meneruskan siasatan berdasarkan bukti rakaman.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *