போலிசாரைக் கத்தியால் குத்திய ஆடவர் கைது! – தலைநகரில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 31,

நேற்றிரவு ஜாலான் புடூவில் ரோந்து பணியிலிருந்த காவல் அதிகாரியைச் சந்தேக நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரியைக் கத்தியால் குத்திய ஆடவரைக் காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே கைது செய்ததாகவும் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரி மேலதிக சிகிச்சைக்காக செராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அபாயக் கட்டத்தைத் தாண்டி தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. 

ஜாலான் புடூவில் வழக்கமான சோதனையில் இருந்த போது சந்தேக நபரைக் காவல் அதிகாரி சோதனையிட முயன்ற போது சந்தேக நபர் காவல் அதிகாரியைக் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆடவர் 56 வயதுள்ள உள்ளூர் நபர் என்றும் அவர் மீது முன்னமே 14 குற்றங்கள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னர் விசாரணை அறிக்கை வெளியிடுவதாக Wangsa Maju மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *