பறிமுதல் செய்யப்பட்ட RM 44 மில்லியன் போதைப்பொருள்களை அழிக்கும் காவல்துறை!
- Thinagaren Sanggaren
- 20 Aug, 2025
ஆகஸ்ட் 20,
கோலாலம்பூர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 44,304,584 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகை போதைப்பொருள்களைக் காவல் துறை முழுமையாக அழிக்கவிருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். இன்று காலை பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருள்களும் Dataran Perkasa காவல் ஆணையத்தில் இறுதிக்கட்ட பார்வைக்காக வைக்கப்பட்டது. இந்த போதைப்பொருள்கள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்படுவதற்காக நாளை நெகிரி செம்பிலானில் உள்ள கழிவு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார்.
கடந்த 2009 முதல் 2024 வரையில் 21,293 போதைப்பொருள் குற்றங்களைக் காவல்துறையினர் தடுத்ததாகவும் அதன் மூலமாகப் பறிமுதல் செய்யப்பட்டவை இவை என்றும் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus தெரிவித்தார். 839,776 கிராம் எடையிலானப் போரை மாத்திரைகளும், 1,345,852 மில்லிலிட்டர்கள் அளவிலான திரவ நிலையிலான போதைப்பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது. Methamphetamine, Ketamine, MDMA, Heroin, Cannabis, Nimetazepam, Kokain, Mitragynine என பல்வேறு வகையிலானப் போதைப்பொருள்கள் இவை என்றும், சுமார் 1.17 மில்லியன் பேர் பயன்படுத்தும் அளவிற்கு இந்த போதைப்பொருள்கள் இருப்பதாகக் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Dato’ Fadil Marsus விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



