RM3.81 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்களுடன் 6 பேர் கைது!
- Thinagaren Sanggaren
- 21 Oct, 2025
அக்தோபர் 21,
கோலாலம்பூர் சிலாங்கூர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Dato Fadil Marsus தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் உள்ளூர்வாசிகளன என்றும் மேலும் மூவர் வெளிநாட்டுப் பெண்கள் என்றும் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Dato Fadil Marsus தெரிவித்தார். அவர்களிடமிருந்து பல்வேறு வகையிலானப் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Dato Fadil Marsus தெரிவித்தார்.
38,710 கிராம் GANJA, 52 கிராம் ECSTASY, 195கிராம் ERIMIN, 32 கிராம் KETAMINE 462,765 கிராம் MDMA போதைப்பொருள் என சுமார் 2 மில்லியன் பேர் பயன்படுத்தும் அளவிற்கானப் போதைப்பொருளைக் காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாக கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Dato Fadil Marsus தெரிவித்தார். Cheras, Ampang Jaya, IMBI என வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்ததாகக் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Dato Fadil Marsus தெரிவித்தார். போதைப்பொருள்களுடன் நகைகள், வாகனங்கள், ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் மொத்த மதிப்பு RM 38 லட்சம் ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Dato Fadil Marsus தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



