RM 20,000 லஞ்சம் கேட்ட 2 காவல் அதிகாரிகள் கைது!

top-news

ஜூன் 4,


மின் சிகரெட் விற்பனையாளரிடமிருந்து சுமார் RM 20,000 லஞ்சம் கேட்டி மிரட்டியதாகச் சந்தேகிக்கப்படும் 2 காவல் அதிகாரிகளை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளதை மலாக்கா மாநில SPRM இயக்குநர் Adi Supian Shafie உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட 26 வயது மின் சிகரெட் விற்பனையாளர் மீது போதைப்பொருள் கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டிய 26 வயது 37 வயதுடைய இரு காவல் அதிகாரிகளும் நேற்று மாலை 6.30 மணிக்கு மலாக்கா லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்டதாக Adi Supian Shafie தெரிவித்தார்.


இன்று காலை 9 மணிக்கு மலாக்கா Majistret நீத்மன்றம் கைது செய்யப்பட்ட lans koperal , koperal பதவி உள்ள இரு காவல் அதிகாரிகளையும் இன்று முதல் 6 நாள்கள் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கும்படி உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட 26 வயது மின் சிகரெட் விற்பனையாளரிடம் வணிக உரிமைக்கான ஆவணங்கள் முழுமையாக இருந்தும் சம்மந்தப்பட்ட 2 காவல் அதிகாரிகளும் போலி வழக்கு தொடுக்க முயன்றதாகவும் சம்மந்தப்பட்ட வணிகரை மிரட்டி லஞ்சமாக RM 20,000 பெற்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Dua anggota polis ditahan SPRM Melaka kerana disyaki meminta dan menerima rasuah RM20,000 daripada seorang peniaga vape. Mereka didakwa mengugut untuk memfailkan kes palsu berkaitan dadah meskipun dokumen perniagaan mangsa adalah lengkap.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *