8.67 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
- Tamil Malar (Reporter)
- 10 Nov, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
பினாங்கு, நவ.11-
பினாங்கு காவல்துறை,
புக்கிட் மெர்த்தாஜாமில் நடத்திய இரண்டு சோதனைகளில் 8.67
மில்லியன் ரிங்கிட்
மதிப்பிலான கஞ்சா வகை போதைப்பொருள் விநியோக கும்பலை முறியடித்தது. பினாங்கு
காவல்துறையின் போதைப்பொருள் புலனாய்வுத் துறையினர் அதிகாலை 1 மணியளவில் நடத்திய இந்த சோதனைகளில் ஒரு பெண் உட்பட 8 பேரைக் கைது செய்தனர்.
பினாங்கு
காவல் துறைத் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் கூறுகையில், முதல் சோதனையில் ஒரு விடுதியில் ஐந்து
உள்ளூர் ஆண்கள், ஒரு பிரித்தானிய ஆண் கைது
செய்யப்பட்டனர். அதே பகுதியில் சாலையோரத்தில் உள்ளூர் குடிமகன், தாய்லாந்து குடிமகள் ஆகிய கணவன்-மனைவி இருவரும் கைது
செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 17 பைகள் நிறைய கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப்பொருட்கள்
சந்தைக்கு சென்றிருந்தால், சுமார்
5 லட்சம் போதைப்பொருள் பயன்பாட்டாளர்களுக்கு
விநியோகிக்கப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது
செய்யப்பட்டவர்கள் 20 முதல்
37 வயதுடையவர்கள், அக்டோபர்
நடுப்பகுதியிலிருந்து இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த வழக்கு
தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக டத்தோ அசிசி
இஸ்மாயில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



