RM 13,500 லஞ்சம் பெற்ற காவல் அதிகாரி கைது! நீதிமன்றம் விசாரணை!

top-news

மே 19,

மச்சாங் காவல்நிலையத்தில் குத்தகையாளரிடமிருந்து லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆணையர் கைது செய்யப்பட்ட வழக்கில் இன்று Sesyen நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணைக்காக நிபந்தனையுடன் RM 8,000 ஜாமீன் வழங்கியது. கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆணையரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க சம்மதித்துள்ள நிலையில் அவரின் கடப்பிதழைப் பறிமுதல் செய்து மாநிலத்தை விட்டு வெளியேற கூடாது என உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 இல் சம்மந்தப்பட்ட காவல் உதவி ஆணையர் Kampung Pak Elong Telong, Bachok பகுதியில் உள்ள ஒரு குத்தகையாளரிடமிருந்து RM9,000 லஞ்சம் பெற்றதாகவும் அந்த பணத்தைக் கொண்டு தனது வீட்டைப் புதுப்பித்ததாகவும் தெரிய வந்துள்ளது. மீண்டும் சொகுசு மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக அதே குத்தகையாளரிடமிருந்து RM4,500 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் தெரிய வந்ததாகக் கிளாந்தான் மாநில லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணை வழக்கறிஞர் Tengku Nurul Haziqah Tuan Yacob தெரிவித்தார்.

Seorang Penolong Pesuruhjaya Polis didakwa di Mahkamah Sesyen Machang kerana menerima rasuah RM13,500 daripada seorang penyewa. Beliau dibebaskan dengan jaminan RM8,000, pasport dirampas dan dilarang meninggalkan negeri sementara menunggu perbicaraan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *