சிலாங்கூரில் போதைப்பொருள் பயன்படுத்திய 34,010 பேர் கைது!
- Thinagaren Sanggaren
- 16 Nov, 2025
நவம்பர் 16,
சிலாங்கூரில் கடந்த ஜனவரி முதல் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றங்களுக்காக மொத்தம் 34,010 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Dato Shazeli Kahar தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பயன்படுத்துதல், போதைப்பொருள் தயாரித்தல் என 30,214 விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Dato Shazeli Kahar தெரிவித்தார்.
கடந்த ஜனவரி முதல் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கையில் RM18.32 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருள்களைக் காவல்துறையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் பறிமுதல் செய்திருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Dato Shazeli Kahar தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் விசாரணை முழுமை பெற்ற போதைப்பொருள்களை ஒப்பந்ததாரர் மூலமாக முழுமையாக அகற்றப்படும் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Dato Shazeli Kahar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



