RM 4.13 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளுடன் மூவர் கைது! – சிலாங்கூர் காவல்துறை!
- Thinagaren Sanggaren
- 17 Jul, 2025
ஜூலை 17,
சிலாங்கூரிலும் பினாங்கிலும் காவல்துறை நடத்திய சோதனை நடவடிக்கையில் பல்வேறு வகையிலான போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் Dato Hussein Omar Khan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரும் 47 முதல் 55 வயதுக்குற்பட்ட போதைப்பொருள் வணிகக் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் Dato Hussein Omar Khan தெரிவித்தார்.
Sri kembangan சாலையில் MAZDA ரக வாகனத்திலிருந்து 14.52 கிலோ Heroin Base போதைப்பொருளும் 920 கிராம் Heroin ரக போதைப்பொருளுடன் ஆடவர் ஒருவரைக் கைது செய்ததாகவும் அவருடன் தொடர்புடைய இருவரைப் பினாங்கு Permatang Pauh பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கைது செய்ததாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் Dato Hussein Omar Khan தெரிவித்தார். மொத்தமாக 47.526 கிலோ heroin Base போதைப்பொருளும் 920 கிராம் Heroin போதைப்பொருளையும் பறிமுதல் செய்ததாகவும் பறிமுதல் செய்யப்பட்டவையின் மொத்த மதிப்பு RM 4.13 மில்லியன் ரிங்கிட் கணக்கிடப்பட்டிருப்பதாகவும் இது சுமார் 60 லட்சம் பேர் பயன்படுத்தும் போதைப்பொருள் என சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் Dato Hussein Omar Khan தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



