ஜொகூர் வாக்குப்பதிவுக்கு PDRM முழு தயார்நிலை

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூலை 6–

ஜொகூர் 16-ஆவது மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மலேசிய அரச காவல்துறை (PDRM) முழுமையான தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் கூறுகையில், 647 காவல் அதிகாரிகள், 2,806 காவலர்கள் மற்றும் 112 சிவில் அதிகாரிகள் உட்பட மொத்தம் 3,565 பேர் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

முன்கூட்டிய வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு, வாக்குப் பெட்டிகளுக்குப் பாதுகாப்பு வழங்குதல், போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், குற்றத் தடுப்பு ரோந்து, கட்டுப்பாட்டு அறை பணிகள், முக்கிய இடங்களைக் கண்காணித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் ஆகியவை இவர்களின் பொறுப்புகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *