அரசைக் கவிழ்க்கும் சதி – போலீஸ் விசாரணை
- Surendran Sumdraraj
- 05 Mar, 2026
புத்ராஜெயா, மார்ச் 5-
மலேசிய அரசை கவிழ்க்கும் சதி தொடர்பாகத் தொடர்பு உள்ளதாக கூறப்படும் விவகாரத்தில், ஒரு நபரிடம் போலீஸ் ஏற்கனவே விளக்கம் பெற்றுள்ளதாக தேசிய போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் குடிமகனான அந்த நபர் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி போலீசிடம் தானாக வந்து விளக்கம் அளித்தார். அதே நாளில் அவரை தொடர்புபடுத்திய புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் அமைச்சரின் மனைவி ஒருவரும் வெளிநாட்டு சில தரப்புகளுடன், குறிப்பாக குறிப்பிடத்தக்க ஸியோனிஸ்ட் குழுவினருடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு போலீஸ் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் தொடர்புடையதாக கருதப்படும் சில நபர்களின் பெயர்களை போலீஸ் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், விரைவில் மேலும் மூன்று அல்லது நான்கு பேரை விசாரணைக்காக அழைத்து விளக்கம் பெற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான உண்மை நிலையை கண்டறிய போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



