போலிசாரைத் தாக்கிய 13 வயது சிறுவர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 28 Oct, 2025
அக்தோபர் 28,
சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்டித்த போலிசாரைத் தாக்கிய இருவர் 13 சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தெமர்லோவில் உள்ள Jalan Tengku Ismail சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒன்றுக் கூடியதைக் கண்ட ரோந்து பணி போலிசார் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் கண்டித்ததாகவும் மோட்டார் சைக்கிளோட்டிகள் 23 வயது காவல் அதிகாரியைத் தாக்கி சம்பவ இடத்திலிருந்து தப்பியதாகவும் தெமர்லோ மாவட்டக் காவல் ஆணையர் Mohd Nasyim Bahron தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 23 வயது காவல் அதிகாரி சிகிச்சைக்காகத் தெமர்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Mohd Nasyim Bahron தெரிவித்தார். காவல் அதிகாரிகளைத் தாக்கியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டிகளைக் காவல் துறையினர் அடையாளம் கண்ட நிலையில் பொதுமக்களின் உதவியுடன் அதிகாலை 2.30 மணிக்கு 13 வயது சிறுவர்கள் இருவரையும் கைது செய்ததாக Mohd Nasyim Bahron தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் 13 வயதுள்ள சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க சம்மதித்திருப்பதாக தெமர்லோ மாவட்டக் காவல் ஆணையர் Mohd Nasyim Bahron தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



