போலிசாரை வெட்டிய கும்பல் சுட்டுக் கொலை! காவல்துறை அதிரடி!
- Thinagaren Sanggaren
- 24 Nov, 2025
நவம்பர் 24,
அலோர் காஜாவில் சந்தேகத்திற்குரிய கும்பலைச் சோதனையிட்டபோது எதிர்பாராத நேரத்தில் காவல் அதிகாரியை அரிவாளால் வெட்டிய கும்பலைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். அதிகாலை 4.30 மணிக்கு அலோர் காஜாவின் Durian Tinggal செம்பனை தோட்டத்தில் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதைக் கண்ட ரோந்து பணிக் காவல் அதிகாரிகள் அவர்களைச் சோதனையிட முற்பட்ட போது கும்பலிலிருந்த ஆடவர் ஒருவர் 30 வயதுள்ள காவல் அதிகாரியின் கையில் அரிவாளால் வெட்டியதும் துணைக் காவல் அதிகாரி அக்கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar விளக்கமளித்தார்.
பாதிக்கப்பட்ட 30 வயது காவல் அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்த மூவரும் 24 முதல் 29 வயதுக்குற்பட்ட தேடப்படும் குற்றவாளிகள் என மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கும்பல் பயன்படுத்திய வாகனத்திலிருந்து பாராங் கத்திகளும் முகமூடிகளும் திருட்டில் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார். சுட்டுக் கொல்லப்பட்ட கும்பலைச் சேர்ந்த 29 வயது ஆடவர் 39 குற்றங்களில் சம்மந்தப்பட்டவர் என்றும் 24 வயது ஆடவர் 12 குற்றங்களில் சம்மந்தப்பட்டவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இக்கும்பல் சிலாங்கூர், நெகிரி செம்பிலாம் மலாக்கா மாநிலங்களில் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், கொள்ளை, வாகனங்களைத் திருடுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும் சுமார் RM1.3 மில்லியன் மதிப்பிலானக் கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் மலாக்கா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Dzulkhairi Mukhtar தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



