பள்ளிக்கூட மண்டபத்தில் கலவரம்! 18 பேர் கைது!
- Sangeetha K Loganathan
- 07 Jul, 2025
ஜூலை 7,
மண்டபம் ஒன்றில் கும்பலாகக் கைகலப்பில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை விசாரித்து வருவதாக PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலிகள் சமூக வலைத்தலங்களில் தவறான இடுகைகளுடன் பகிரப்பட்ட நிலையில் இது பள்ளி மண்டபத்தில் ஏற்பட்ட கலவரம் என்றாலும் இது பள்ளி நிகழ்ச்சிகளுடனோ, பள்ளி நிர்வாகத்துடனோ தொடர்புடையதல்ல என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib விளக்கமளித்தார்.
கடந்த வெள்ளிக் கிழமை தனியார் நிறுவனம் பொருள்களை ஏலம் விடுவதற்காகப் பள்ளி மண்டபத்தைப் பயன்படுத்தியதாகவும் ஏலத்தின் போது ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் பல தரப்புகளுக்கிடையே கலவரம் ஏற்பட்டதாக PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார். கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 18 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் 17 முதல் 48 வயதுக்குற்பட்டவர்கள் என கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாக PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Mohammad Shofee Tayib தெரிவித்தார்.
Sebuah dewan sekolah di Pontian menjadi lokasi rusuhan ketika acara lelongan anjuran syarikat swasta. Seramai 18 orang berusia 17 hingga 48 tahun ditahan. Polis sahkan insiden tiada kaitan dengan pihak sekolah dan teruskan siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



