அட்சய திருதியை செய்யவேண்டிய பூஜைகளும் தானமும்
- Surendran Sumdraraj
- 17 Apr, 2026
அட்சய திருதியை வரும் ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம், வெள்ளி வாங்குவது மற்றும் புதிய முயற்சிகளைத் தொடங்குவது செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தைப் பெருக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ரோகிணி நட்சத்திரம் மற்றும் ராஜயோகத்துடன் வருவதால் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த புனித நாளில் தான் பரசுராமர் அவதரித்தார். மகாலட்சுமி அருள் அதிகரிக்கும் நாள். குபேரன் செல்வத்தை பெற்ற நாள் எனவும் கூறப்படுகிறது. ஆகவே இந்த நாள் செல்வமும், புண்ணியமும் இரட்டிப்பாகும் அரிய தருணம்.
தங்கம் வாங்க உகந்த நேரம் எது? அதிர்ஷ்டம் தரும் வழிபாட்டு முறைகள்!
அன்றைய தினம் மேஷ ராசியில் சூரியனும், ரிஷப ராசியில் சந்திரனும் இரு சிறந்த நிலைக்கு நகர்ந்து அட்சய யோகத்தை உருவாக்குகின்றன. இந்த நாளில் தங்கம் வாங்க சரியான நேரம் எது என்பதை பார்த்தால் அட்சயதிருதியை ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி காலை 10.49 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 7.27 மணி வரை நீடிக்கிறது.
அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் இந்த நாளில் தங்கம் வெள்ளிதான் வாங்க வேண்டும் என்பது இல்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் அதிர்ஷ்டம் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்சமும் கிடைக்கும். அட்சய திருதியை அன்று தானியங்கள் உப்பு மஞ்சள் விளக்கு வெண்கல மணி லட்சுமி படம் பணம் குங்குமச்சிமிழ் சந்தனம் சர்க்கரை என எது வேண்டுமானாலும் வாங்கலாம். தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால் வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைபிடித்து வரும் நம்பிக்கை ஆகும். தங்கம் வாங்குகிறோமோ இல்லையோ அந்த நேரத்தில் அந்த நல்ல நேரங்களில் உப்பு அல்லது மஞ்சள் வாங்கினால் போதும் தங்கம் வாங்கின யோகமும் மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
இந்த நாளில் தயிர் சாதம் தானம் செய்தால் மகாலட்சுமி மனம் குளிர்வாள் இந்த நாளில் எதை செய்தாலும் அதன் பலன் ஆயிரம் மடங்காக நமக்கு வரும். உணவு, உடை, கல்விக்கு உதவி முதியவருக்கு பண உதவி என எந்த தர்மம் செய்தாலும் குடும்பத்தில் இருபத்தியோரு தலைமுறைக்கும் புண்ணியம் தொடரும். இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
திருப்பதி ஏழுமலையான் திருமணத்திற்கு கடன் கொடுத்தவர் குபேரன் சிவந்தமேனி குள்ள வடிவம் பெரிய வயிறு சிரித்த முகம் என காட்ச தரும் இவர் தவத்தில் ஈடுபட்டு சிவனருள் பெற்றார்.
இவரது கிரீடத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் பால் தேன் தயிர் நெய் கற்கண்டு மாவில் செய்த இனிப்பு வகைப்படைத்து ரோஜா மலரால் அர்ச்சனை செய்ய இவரது அருள் முழுமையாக கிடைக்கும். பசுஞ் சாணத்தால் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு நிலையில் மாவிலை தோரணம் கட்டும் வீட்டில் செல்வம் வளம் பநம்பிக்கை அன்று செய்ய வேண்டிய முக்கிய பூஜை, அட்சய பானை பூஜை. இந்த பூஜையை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
பானை பூஜை செய்வது எப்படி?
ஒரு வெண்கல அல்லது பித்தளை பானை எடுக்க வேண்டும்.
அதில் குங்குமம் வைத்து, பச்சரிசி நிரப்ப வேண்டும்
பானையின் கழுத்தில் மஞ்சள் துணி கட்ட வேண்டும்
பூமாலை, துளசி ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும்
வசதி இருப்பின் தங்க நகை ஒன்றை அரிசியின் மேல் வைக்கலாம்
பிறகு பானையின் முன் கோலம் இடவும்.
பூ, துளசி, அட்சதை தூவி, கற்பூரம் அல்லது நெய் தீபம் காட்டவும்
சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுக்கவும்.
இந்த பூஜை வாழ்க்கையில் குறையாத செல்வத்தையும் நலன்களையும் தரும். அட்சய திருதியை அன்று ஆலமர இலையில் மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் ஜெபித்து, அதை நோயாளியின் தலையணையின் கீழ் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்று நம்பப்படுகிறது.அட்சய திருதியை அன்று புனித நதிகளில் நீராடி, இறைவனை வழிபட்டால் வாழ்க்கையில் குறைவில்லா செல்வமும், ஆனந்தமும் கிடைக்கும்.
:- லட்சுமி சுப்பிரமணியம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



