RM 5.75 மில்லியன் மதிப்பிலானக் கொள்கலன்கள் பறிமுதல்! – கிள்ளான் துறைமுகம்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 28,

கிள்ளான் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களைச் சோதனையிட்ட எல்லை பாதுகாப்பு ஆணையம் 5 கொள்கலன்களைப் பறிமுதல் செய்துள்ளது. கழிவுப்பொருள்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டு வந்திருந்த 2 நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக அந்நிறுவனத்திற்குச் சொந்தமாக 5 கொள்கலன்களையும் சோதனையிட்டதாகச் சிலாங்கூர் மாநில AKPS தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து மின்னணுக் கழிவுகளை மலேசியாவுக்குள் கொண்டு வந்தது மட்டுமின்றி அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் கைவிடும் கும்பலுக்கு எதிராக AKPS எனும் எல்லை கட்டுப்பாட்டு பாதுகாப்பு ஆணையம் தனிப்படை அமைத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இச்சோதனையில்  RM 5.75 மில்லியன் மதிப்பிலான மதுபானங்களும் கடத்தல் சீகார்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கொள்கலன்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிள்ளான் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்குரிய கொள்கலன்களை உரிமைக் கொண்டாட எந்தவொரு நிறுவனமும் முன்வராததால் கொள்கலன்களைச் சோதனையிட்டதாகச் சிலாங்கூர் சுங்கத் துறை தெரிவித்துள்ளது. 37,128 லிட்டர் மதுபானம், 6,250 கிலோ சீகார், 3,900 கிலோ அரிசி ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டவையின் மொத்த மதிப்பு, வரியுடன்  5.75 மில்லியன் ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *