Spouse visa-வில் 'வேலை அனுமதி இல்லை' பிரிவை அகற்ற வேண்டும்! - NGO கோரிக்கை
- Shan Siva
- 18 Nov, 2024
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 18: மலேசியர குடிமகன் அல்லாத வாழ்க்கைத் துணைவர்கள் தானாக நாட்டில் வேலை செய்வதைத் தடுக்கும் long-term social visit passes குறித்த விதியை நீக்குமாறு Family Frontiers அமைப்பு உள்துறை அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.
Spouse visa-வில் உள்ள 'வேலை அனுமதி இல்லை' பிரிவுகளை அகற்ற வேண்டும் என்றும், அதன் மூலம் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணத்தை பதிவு செய்தவுடன்
உடனடியாக வேலை அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மலேசியாவில்
வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களின் வேலைவாய்ப்பு உரிமைகளை நிர்வகிக்கும்
கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை உள்துறை அமைச்சர் சைஃபுதீன்
நசுஷன் இஸ்மாயில் அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *