போதுமான ஆதரவு இல்லாததால்தான் எதிர்க்கட்சியினர் பேரணி நடத்துகின்றனர்!
- Muthu Kumar
- 27 Jul, 2025
அலோர்ஸ்டார். ஜூலை 27
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சியினருக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை.அதன் காரணத்தினால்தால், அவர்கள் மக்களவைக்கு வெளியில் அன்வார் வெளியேற வேண்டும் என்று கோரி பேரணியை நடத்தி இருப்பதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நகத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.
ஜனநாயக முறைப்படி மக்களவையில் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாததால், மக்கள் நெருக்குதலை எதிர்நோக்கி இருக்கின்றனர் என்று கூறி, அன்வார் வெளியேற வேண்டும் என்று மக்களவைக்கு வெளியில் கோஷமிடுவதாகவும் உண்மையில் மக்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.
“அன்வார் (பதவி) இறங்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். அதன்படி அன்வார் எண்ணெய் விலையை குறைத்திருக்கின்றார். அன்வார் இறங்க வேண்டும் என்று மீண்டும் அவர்கள் கோருகின்றனர். அதன்படி அவர் மின்சாரக் கட்டணத்தைக் குறைத்திருக்கின்றார். அப்படி இருந்தும் அவர்கள் இன்னமும் பேரணி நடந்த இறங்கியுள்ளனர்.
"எதிர்க்கட்சிகள் உண்மையாகவே ஜனநாயக கோட்பாட்டை மதித்தால், ஒரு தலைவரை பதவியிறக்கம் செய்ய இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, மக்களவைக்குள் அவ்வாறு (நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம்) செய்ய வேண்டும் அல்லது மக்களவைக்கு வெளியில் பொதுத் தேர்தலில் அவ்வாறு செய்ய வேண்டும்.
“ஆனால், அவர்கள் ஏன் அப்படி செய்யவில்லை. மக்களவை அமைதியாக இருக்கிறது. இதற்கு உண்மையான காரணம், எதிர்க்கட்சியினரிடம் போதுமான ஆதரவு இல்லை. ஆதலால், அவர்கள் இந்த விவகாரத்தை மக்களவைக்கு வெளியே கொண்டு வந்திருக்கின்றனர். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று அவர்கள் நினைத்தனர் என்று கெடா, அலோர்ஸ்டாரில் சைஃபுடின் நேற்று சனிக்கிழமை அவர் தெரிவித்தார்.
கூட்டம் நடத்த எதிர்க்கட்சியினரை அரசாங்கம் தடுக்கவில்லை என்றும் மாறாக, அவர்கள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றும் வரையில் அவர்கள் நடத்தும் பேரணிக்கு உதவ அது தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இப்பேரணியில் கலந்து கொள்வது தொடர்பில் அரசாங்கம் சில முக்கியமான தடைகளை மட்டுமே விதித்தது என்று கூறிய சைஃபுடின், சிறுவர்களை உடன் கொண்டுவரக் கூடாது, ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடாது தீ வைக்கக் கூடாது அல்லது பட்டாசுகளைக் கொளுத்தக் கூடாது ஆகியவையே அவையாகும் என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



