வெளியே முஹிடினுக்கு எதிர்ப்பு-உள்ளே இன்னமும் பெர்சத்துவுடனா?
- Muthu Kumar
- 28 Oct, 2025
கோலாலம்பூர், அக். 28-
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்ட போதிலும், தாசேக் குளுகோர் எம்பி வான் சைஃபுல் வான் ஹன் இன்னமும், மக்களவையில் பெர்சத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் அமர்ந்திருப்பது குறித்து அரசாங்க ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் நேற்று 2026ஆம் ஆண்டுக்கான விநியோக சட்ட திருத்த மசோதா மீதான தமது வாதத்தை வான் சைஃபுல் முடித்துக் கொண்ட பின்னர், அவரின் இருக்கை குறித்து மக்களவை துணை சபாநாயகர் எலிஸ் லாவ் கியோங் இங்கிடம் பக்காத்தான் ஹராப்பானின் கோத்தா மலாக்கா எம்பி கூ பூய் தியோங் கேள்வி எழுப்பினார்.கூவின் அத்தகைய கேள்வியினால், மக்களவையில் அரசாங்க ஆதரவு மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் வாய்ச் சண்டையும் மூண்டது.
"நாம் அனைவருக்கும் தெரிந்தபடி, பெர்சத்து கட்சியிலிருந்து தாசேக் குளுகோர் (வான் சைஃபுல்) நீக்கப்பட்டு விட்டார். அப்படி இருந்தும் அவர் ஏன் இன்னமும் அதே இருக்கையில் அமர்ந்திருக்கின்றார்?.அவர் ஒரு சுயேச்சை எம்பியா அல்லது இன்னமும் எதிர்க்கட்சி எம்பியாக இருக்கின்றாரா? என்று கூ கேள்வி எழுப்பினார்.
அதோடு, "வெளியில் பாகோவை (டான் ஸ்ரீ முஹிடின் யாசின்) எதிர்க்கின்ற நீங்கள், உள்ளே (மக்களவையில்) இன்னமும் பெர்சத்துவில்தான் இருக்கின்றீர்களா? என்று வான் சைஃபுலிடம் கூ கேட்டார்.அதற்கு பதிலளித்த வான் சைஃபுல், பெர்சத்து உயர்மட்டத் தலைமைத்துவத்திடம் தாம் தமது மேல்முறையீட்டு மனுவை வழங்கி இருப்பதன் காரணத்தினால் தான்,தாம் இன்னமும் எதிர்க்கட்சி இருக்கையில் அமர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
"சபாநாயகர் அவர்களே, எங்கள் கட்சியில் மேல்முறையீடு செய்வதற்கான விதிமுறைகள் இருக்கின்றன. மேல்முறையீடு தொடர்பிலான முடிவு ஏதும் இன்னும் காணப்படவில்லை."பெர்சத்து கட்சியின் சட்ட திட்டங்கள் குறித்து கூவுக்கு பயிற்சி அளிக்க வேண்டியிருந்தால், என்னால் அவ்வாறு செய்ய முடியும். கட்சியின் சட்ட திட்டங்கள் எனக்கும் தெரியும் என்று வான் சைஃபுல் தெரிவித்தார்.
இம்மாதம் 14ஆம் தேதி வான் சைஃபுலை பெர்சத்து நீக்கி இருந்தது. இவரோடு இதர நான்கு பெர்சத்து தொகுதித் தலைவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.பெர்சத்து உச்சமன்ற அதோடு, மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினரும் உறுப்பினருமான வான்
அஹ்மாட் ஃபைசால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைவர் பதவியிலிருந்து முஹிடினை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



