ம.இ.காவில் இணைகிறேனா? வதந்திக்கு PPP கட்சி லோக பாலா விளக்கம்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 6,

பி.பி.பி கட்சியின் தலைவரான டத்தோ லோகபாலா தவறான செய்திகளைப் பரப்பி கட்சியின் உறுப்பினர்களைக் குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். PPP எனும் மக்கள் முன்னேற்றக் கட்சி ம.இ.காவுடன் இணையவிருப்பதாகவும் தமக்கு ம.இ.காவில் உதவித் தலைவர் பதவி வழங்கப்படவிருப்பதாகவும் தமிழ் நாளிதழில் தலைப்புச் செய்தியாக வெளிவந்திருப்பது வெறும் வதந்தியே என முன்னாள் துணை அமைச்சருமான Dato Dr. Loga Bala Mohan விளக்கமளித்தார். 



ம.இ.காவுடன் இணைவது குறித்தோ, ம.இ.காவின் உயர்மட்ட பதவிகளைப் பெறுவது குறித்தோ எந்தவொரு சந்திப்பும் நடத்தப்படவில்லை என்றும் குறிப்பாக ம.இ.கா தலைவர்களிடம் நாம் இது தொடர்பாக எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தவில்லை என Dato Dr. Loga Bala Mohan தெளிவுப்படுத்தினார். பி.பி.பி கட்சியை ம.இ.காவுடன் இணைப்பதாகவும் தனக்கு ம.இ.காவின் உதவித் தலைவர் பதவி வழங்கப்படுவதாகவும் தமிழ் நாளிதழில் வெளியான செய்தி வதந்தி என PPP எனும் மக்கள் முன்னேற்றக் கட்சி Dato Dr. Loga Bala Mohan தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *