தலைநகரில் PPR வீடுகளை மேம்படுத்த RM 9.6 மில்லியன் நிதி! HANNAH YEOH!
- THINAGAREN SANGGAREN
- 12 Jul, 2026
ஜூலை 12,
தலைநகரில் உள்ள மலிவு விலையிலான PPR வீடுகளை மேம்படுத்த கூட்டரசு அமைச்சு RM 9.6 மில்லியன் ரிங்கிட் நிதியை வழங்கியிருப்பதாக கூட்டரசு அமைச்சர் HANNAH YEOH இன்று தெரிவித்தார். முதற்கட்டமான Desa Tun Razak PPR அடுக்குமாடிக் குடியிருப்பை நேரில் பார்வையிட்டதுடன் முதற்கட்ட பணிகளுக்காக RM 70 லட்சம் ரிங்கிட் வழங்கியிருப்பதாகவும் HANNAH YEOH தெரிவித்தார். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வசதிகளை மேம்படுத்தவும் புதிய கால்வாய்கள் அமைப்பதுடன் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும் இந்த 90 லட்சம் நிதி முறையாகப் பயன்படுத்தப்படும் என HANNAH YEOH தெரிவித்தார்.
Desa Tun Razak PPR அடுக்குமாடிக் குடியிருப்பில் 1,824 வீடுகளில் சுமார் 8,000க்கும் மேலானவர்கள் வசிப்பதாகவும் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து இந்த மேம்பாட்டுப் பணிகள் திட்டமிட்டுள்ளதாக கூட்டரசு அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார். மின்சாரப் பாதுகாப்புகளுக்கும் தீ தடுப்பு ஆணையத்தை அமைக்கவும் RM 16 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தப்படும் என்றும் விளையாட்டு மைதானங்களுடன் பொது வசதிகளை மேம்படுத்த RM 9 லட்சம் ரிங்கிட் பயன்படுத்தப்படும் என HANNAH YEOH தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



