முதலாம் படிவ மாணவியின் மரணம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஜூலை 26-

சாரா கைரினா மகாதீர் எனும் முதலாம் படிவ மாணவியின் மரணம் தொடர்பாக போலீஸ் மேற்கொண்டு வரும் விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.

ஆகவே, இவ்வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளதால் இது குறித்து எந்த ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் அறிவுறுத்தினார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய யாரும் பாதுகாக்கப்படவோ அல்லது சட்ட நடவடிக்கையிலிருந்து விடுபடவோ மாட்டார்கள் என்பதால், போலீஸ் வெளிப்படையாகவும், விரிவாகவும், நேர்மையாகவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் இடம் அளிக்க வேண்டும் என்று ஃபட்லினா கூறினார்.

சபா மாநில கல்வித்துறை மூலம் கல்வி அமைச்சு விசாரணை செயல்முறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக தமது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் நலனை தொடர்ந்து பாதுகாப்பதில் அமைச்சு உறுதியாக உள்ளதாகவும் ஃபட்லினா தெரிவித்தார்.

கடந்த ஜூலை 17 ஆம் தேதி அதிகாலை, சபா பாப்பாரில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததால்,13 வயதான சாரா கைரினா மகாதீர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *