தயாரிப்பாளராக களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்; முதல் பட அறிவிப்பு வெளியீடு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 6 –

இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றிகரமான பயணத்தை தொடரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். அவர் தொடங்கியுள்ள 'பிஆர் ஷோ' (PR Show) தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2019-ஆம் ஆண்டு 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் 'லவ் டுடே' திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து 'டிராகன்', 'டியூட்' உள்ளிட்ட படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்தார்.

பிரதீப்பின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இதில் மமீதா பைஜூ, ஸ்வாசிகா, சிவாஜி சொண்டினேனி, அனாமிகா மஹி, லிசி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *