இறைவனிடம் வேண்டுகிறேன் தலைவா- ரஜினியை வாழ்த்திய விஜய்!
- Muthu Kumar
- 18 Aug, 2025
விஜய்க்கும், ரஜினிக்கும் கோலிவுட்டில் யார் நம்பர் ஒன் என்ற போட்டி நடந்துவருகிறது. இரண்டு பேரின் படங்களும் வசூலில் சண்டைதான் செய்துவருகின்றன. அதேபோல் இரண்டு பேரின் ரசிகர்களும் ஒருவரையொரு எதிரியாகத்தான் பார்க்கிறார்கள். முக்கியமாக ஜெயிலர் சமயத்தில் எல்லாம் இவர்களின் விவகாரம் பெரிய விவாதமாகவே மாறியது. அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே ஈகோ க்ளாஷ் உச்சத்தில் இருக்கிறது.
இந்நிலையில் ரஜினியை விஜய் வாழ்த்திய புகைப்படம் ஒன்று கவனம் ஈர்த்திருக்கிறது. அதாவது ரஜினி திரைத்துறைக்கு வந்து 25 வருடங்களை நிறைவு செய்தபோது விஜய் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்தார். அப்போது சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய அவர், "தலைவா திரையுலகத்தில் நீ கால் பதித்து இது 25வது ஆண்டு. உன்னுடைய 50ஆவது ஆண்டு திரையுலக வாழ்க்கையிலும் இதேபோல் பூச்செண்டு கொடுத்து மகிழ இறைவனை வேண்டுகிறேன். ப்ரியமுடன் உங்கள் ரசிகன் விஜய்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் புகைப்படம்தான் ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு இருக்கிறது. இதனை கவனித்த சிலரோ 25வது ஆண்டுக்கு வாழ்த்திய விஜய்,50ஆவது ஆண்டுக்கு வாழ்த்தாததற்கு ஈகோதான் காரணம் என சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



